அரசின் நெல் கொள்முதல் மையங்கள் திறப்பு: விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

 

ஈரோடு,பிப்.25: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பாசனத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நெல் அறுவடை நடந்து வருகிறது. பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் உக்கரம், நாகரணை, காசிபாளையம், கலிங்கியம், நாதிபாளையம், கவுந்தப்பாடி, காஞ்சிகோவில் ஆகிய இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்களது பட்டா, ஆர்எஸ்ஆர், ஆதார் கார்டு, விஏஓ, சான்று, வங்கி பாஸ் புத்தக முன் பக்க நகல், புகைப்படம்2 வழங்க வேண்டும்.

ஆவண பதிவுக்குப்பின் வரிசைப்படி நெல் கொள்முதல் செய்யப்படும். சன்ன ரக நெல் கிலோவுக்கு ரூ.23.10க்கும், குண்டு ரக நெல் கிலோவுக்கு ரூ.22.65க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே, நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அரசின் கொள்முதல் மையங்களில் நெல் விற்பனை செய்து பயன்பெறலாம் என கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை கூட்டமைப்பு இணை செயலாளர் வெங்கடாசலபதி தெரிவித்துள்ளார்.

The post அரசின் நெல் கொள்முதல் மையங்கள் திறப்பு: விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: