வரத்து குறைந்ததால் மீன்கள் விலை உயர்வு

 

ஈரோடு ,ஜூலை 22: ஈரோடு மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து குறைவால் விலை உயர்ந்து விற்பனையானது. ஈரோடு ஈவிஎன் சாலை ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு நாகப்பட்டினம், ராமேஸ்வரன், காரைக்கால், தூத்துக்குடி மற்றும் கேரளா,கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவில் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.வாரந்தோறும் 10 முதல் 15 டன்கள் வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

தற்போது கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் உள்ளதால் ஈரோடு மார்க்கெட்டிற்கு 8 டன் மீன்களே விற்பனைக்கு வந்தது. வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்ந்து விற்பனையானது. மீன்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் நேற்று ஆர்வமுடன் மீன் மார்க்கெட் வந்து தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர்.

இதில், மீன் மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை கிலோவில்: வஞ்சிரம்-ரூ.1,100,கடல் பாறை-ரூ.500, சங்கரா-ரூ.350,நெத்திலி-ரூ.300, அயிலை-ரூ.300, மத்தி-ரூ.350, இறால்-ரூ.700, திருக்கை-ரூ.400,புளூ நண்டு-ரூ.700,விளமீன்-ரூ.500,வாவல்-ரூ.800,அணை மீன்களான லோகு-ரூ.170,ஜிலேபி-ரூ.120, கட்லா-ரூ.170. பாறை-ரூ.160,நெய் மீன் ரூ.150க்கு விற்பனையானது.

The post வரத்து குறைந்ததால் மீன்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: