தி ஈரோடு காலேஜ் ஆப் பார்மசியில் தேசிய அளவிலான கருத்தரங்கு

 

ஈரோடு,பிப்.24: ஈரோடு வேப்பம்பாளையத்தில் உள்ள தி ஈரோடு காலேஜ் ஆப் பார்மசி கல்லூரியில் ‘பிரிட்ஜிங் பார்மா ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் சொத்துரிமை முன்னோடி சுகாதார கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான மூன்று நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கிற்கு கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளரான நடராஜன் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் ஜெகநாதன், துணை தலைவர் தங்கமுத்து, பொருளாளர் குழந்தைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ஊட்டி ஜெஎஸ்எஸ் காலேஜ் ஆப் பார்மசி கல்லூரியின் முதல்வர் முனைவர் தனபால் பங்கேற்று பேசினார்.தொடர்ந்து தஞ்சாவூர் பிஎம்ஐஎஸ்டி அறிவியல் பயிற்சி மற்றும் வெளியீட்டு மையத்தின் இயக்குநர் பாலக்குமார் பிச்சை,கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண இன்ஸ்டியூட் ஆப் மருந்தியல் கல்லூரியின் துறை தலைவர் ஸ்ரீ ராம், கொச்சி ஆர் அன்ட் டி முனைவர் சரிகா பொன்னு, புதுச்சேரி மதர்தெரசா முதுகலை மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முனைவர் கவிமணி,

கோவை ஸ்டெம் செல் புற்றுநோய் மரபணு மையத்தின் இயக்குநர் முனைவர் அய்யாவு மகேஷ்,பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மேலாளர் கண்ணன், நாமக்கல் ஜெகேகேஎன் பார்மசி கல்லூரியின் மருந்தியல் துறை பேராசிரியர் முனைவர் வெங்கடேஸ்வரமூர்த்தி, தெலுங்கான யூகியா பார்மா துணை மேலாளர் டாக்டர் சாய்குமார், உத்திரபிரதேசம் ஐபிசி பார்மகோ விஜிலென்ஸ் சீனியர் முனைவர் தாரணி பூபதி, தி ஈரோடு பார்மசி கல்லூரியின் துறை தலைவர் கிருஷ்ணகுமார், இணை பேராசிரியர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

இந்த கருத்தரங்கின் நிறைவு நாளில் முனைவர்கள் சிவக்குமார், செந்தில்குமார், சங்கமேஸ்வரன், பெருமாள் மற்றும் பார்மசி கல்லூரிகளின் முதல்வர்கள் வாழ்த்தி பேசினர். முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் சம்பத்குமார் வரவேற்றார். முடிவில் கல்லூரியின் துணை தலைவர் சரவணன் நன்றி கூறினார். தமிழகத்தில் உள்ள 32 மருந்தியல் கல்லூரிகளிலிருந்து 700க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும், 75 பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

The post தி ஈரோடு காலேஜ் ஆப் பார்மசியில் தேசிய அளவிலான கருத்தரங்கு appeared first on Dinakaran.

Related Stories: