நீலகிரி பூண்டு விலை புதிய உச்சத்தை எட்டியது

 

ஊட்டி, பிப்.23: பூண்டு விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பெரும்பாலான கடைகளில் பூண்டு விற்பனை செய்வதை தவிர்த்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி, பீன்ஸ், முள்ளங்கி, பீட்ரூட் மற்றும் முட்டைகோஸ் உட்பட பல்வேறு மலை காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர அதிகளவு பூண்டு விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பூண்டிற்கு மணம் மற்றும் சுவை அதிகம் என்பதால், எப்போதும் இதற்கு விலை அதிகம் கிடைக்கும். இதனால், விவசாயிகளுக்கு எப்போதும் லாபம் கிடைக்கும். ஒரு சில சமயங்களில் மட்டுமே விலை சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும். நிலையில், கடந்த 2 மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பூண்டிற்கு விலை உயர்ந்துள்ளது.

தற்போது கிலோ ஒன்று ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு அதிகம் லாபம் கிடைக்கிறது. அதேசமயம், ஊட்டி பூண்டு கடைகளில் தற்போது கிலோ ஒன்று ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து வகை சமையலுக்கு பூண்டு அவசியம் என்பதால், வேறு வழியின்றி இதனை பொதுமக்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் வாங்கிச்செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அதிக விலை கொடுத்து வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

The post நீலகிரி பூண்டு விலை புதிய உச்சத்தை எட்டியது appeared first on Dinakaran.

Related Stories: