பாலக்காட்டில் 24 மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்கல்

 

பாலக்காடு, ஜூலை 21: பாலக்காடு மாவட்ட பஞ்சாயத்து சார்பில் 2023-24ம் ஆண்டு நிதியாண்டு பட்ஜெட்டில் 5 மகளிர் உள்பட 24 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வீல்சேர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பினுமோள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்களை வழங்கி பேசுகையில், சமூகத்தில் சுதந்திரமாக செயல்படவும், சுயதொழில் வேலைகளுக்கும், கைவினைப்பொருட்கள் விற்பனைகள் செய்வதற்கும் இந்த முச்சக்கர வாகனங்கள் வசதியுடையது. இதனால், இவர்கள் சமூகத்தில் மேன்மையடைவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.

துணை கலெக்டர் மோகனப்ரியா, சமூகநீதி நலத்துறை அதிகாரி சமீர்மச்சிங்கல் ஆகியோர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து செயற்குழு மேர்மன் அனிதா, உறுப்பினர் ஷானிபா, ஆர்டிஓ திலீப், ஜனிக்ஸ், மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் ராமன்குட்டி, பொருளாளர் அனில்குமார், தலைமை கண்காணிப்பாளர் பிரகாஷ், பிரதீஷ்நூர்ஜெட், சவுக்கத்தலி, வைஷணவ், நீது பிரசாத், நீது மோகன்தாஸ் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பாலக்காட்டில் 24 மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: