கடக்கோடு கிராமத்தில் உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

 

ஊட்டி, ஜூலை 22: கோத்தகிரி அருகே கடக்கோடு கிராமத்தில் ஒழுங்குப்படுத்தப்பட்ட சந்தைகளின் செயல்பாடு மற்றும் மண் உரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் ஒழுங்குப்படுத்தப்பட்ட சந்தைகள் மற்றும் E-Nam பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி கடக்கோடு கிராமத்தில் நடந்தது.

இப்பயிற்சிக்கு ஊர் தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ணகுமார், E-Nam வலைதளத்தில் பதிவு செய்யும் முறைகள் மற்றும் ஒழங்குபடுத்தப்பட்ட சந்தைகளின் செயல்பாடு முறைகள் குறித்து விளக்கி பேசினார். முன்னோடி விவசாயி ராம்தாஸ், அங்கக இடுபொருட்களான மண்புழு உரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். தோட்டக்கலை அலுவலர் ஐஸ்வர்யா, தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.

அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த், அட்மா திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள் குறித்து எடுத்துரைத்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் மணிமேகலா, மண்புழு உரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரவீணா, மாடி தோட்டம் மற்றும் வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல் குறித்து விளக்கினார். இப்பயிற்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

The post கடக்கோடு கிராமத்தில் உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: