பிதர்காடு பகுதியில் கான்கிரீட் சாலை பழுது பொதுமக்கள் அவதி

 

பந்தலூர், ஜூலை 22: பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் கான்கிரீட் சாலை அமைத்து சில மாதங்களில் பழுதானதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கூடலூர் ஊராட்சி ஒன்றியம் நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பிதர்காடு பிரதான சாலையில் இருந்து ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளிக்கு செல்லும் சாலை பழுதடைந்து காணப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூடலூர் ஊராட்சி ஒன்றியம் நெலாக்கோட்டை ஊராட்சி சார்பில் ரூ 16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.

சாலை அமைத்து சில மாதங்களில் பழுதானதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த சாலை ஸ்கூல் மட்டம், மானி வயல் கைவட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையாக இருந்து வருகிறது. இப்பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலையில் தினம் தோறும் ஆட்டோ உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. சாலை அமைத்து சில நாட்களில் பழுதானதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பிதர்காடு பகுதியில் கான்கிரீட் சாலை பழுது பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: