குஞ்சப்பனை அருகே குட்டிகளுடன் காட்டு யானைகள் உலா

 

கோத்தகிரி, ஜூலை 20: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளது.  இந்த நிலையில் சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைக் கூட்டம் குட்டிகளுடன் தட்டப்பள்ளம், முள்ளூர், மாமரம், குஞ்சப்பனை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு உள்ளது. அவ்வாறு முகாமிட்டுள்ள காட்டு யானைக் கூட்டம் பகல் நேரங்களில் தேயிலை, காபி தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபடுவதுடன் சில சமயங்களில் கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உலா வருகிறது.

இதனால் தேயிலை தோட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் மற்றும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். எனவே தட்டப்பள்ளம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைக் கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post குஞ்சப்பனை அருகே குட்டிகளுடன் காட்டு யானைகள் உலா appeared first on Dinakaran.

Related Stories: