மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து ஆய்வு

 

கோவை, பிப். 23: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தாவர நல முனைப்பு நிதி, உலக மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்பாட்டு மையம் மெக்சிகோ மற்றும் வேளாண்மைத்துறை, சூலூர் மற்றும் சுல்தான்பேட்டை வட்டாரம் இணைந்து மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு ஆய்வுத் திடலை விவசாயிகளின் தோட்டங்களில் அமைத்துள்ளது.

இத்திடல்கள், சுல்தான்பேட்டை வட்டத்தில், லட்சுமிநாயக்கன்பாளையம் கிராமம், தேவராஜன் என்பவர் தோட்டத்திலும், சுல்தான்பேட்டை வட்டத்தில் அக்கநாயக்கன்பாளையம் கிராமம், பாலசுப்பிரமணியன் என்பவர் தோட்டத்திலும் ஒரு ஏக்கர் பரப்பளவில், செப்டம்பர் மாதத்தில் மக்காச்சோளம் விதைப்பு செய்யப்பட்டு பயிர் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நேரடி பாதுகாப்பு முறை பாதுகாப்பு முறைகள் பயன்படுத்தாத தடுப்பு திடல், தாவர மூலக்கூறுகள் பாதுகாப்பு முறை, உயிரியல் பாதுகாப்பு முறை என வயல்களில் உள்ளன.

பயிர் பாதுகாப்பு முறைகளின் அனுகூலம் பற்றியும், இவற்றுள் சிறந்த முறையை தேர்ந்தெடுத்து மற்ற விவசாயிகளுக்கு பிரபலப்படுத்தவும் உள்ளது. அதன்படி, சிறந்த பாதுகாப்பு முறையினை தேர்ந்தெடுக்க விவசாயிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் இணைந்து ஆய்வுத்திடல் மதிப்பீடு செய்யும் வயல்வெளி விழா இரு வயல்களிலும் நடைபெற்றன.

இதில், வேளாண்மை உதவி இயக்குனர் கண்ணாமணி, பூச்சியியல் துறை இணை பேராசிரியர் சண்முகம், பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் சாந்தி, நோயியல் பேராசிரியர் பரணிதரன், வேளாண்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் உள்ளிட்ட பாதிப்புகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

The post மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: