மணிமுத்தாறு அருகே காட்டு யானைகள் அட்டகாசம்

அம்பை,பிப்.23: மணிமுத்தாறு அருகே அரிவாள் தீட்டும் ஓடை சீப்புமடை பகுதியில் காட்டு யானைகள் விளைநிலங்களில் புகுந்து நெற்பயிர்களை நாசம் செய்தது. கடந்த ஜனவரி மாதம் பொட்டல், சீரான்குளம் ஆகிய பகுதி விளைநிலங்களில் புகுந்து நாசம் செய்தது. யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து விவசாயி குமார் கூறுகையில், ‘எனது 3 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் பயிரிட்டு அறுவடைக்கு தயாரான நிலையில் யானைக்கூட்டம் நாசம் செய்ததால் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. வனத்துறையின் சார்பில் சோலார், மின்வேலி மற்றும் அகழிகள் வெட்டினாலும் அவற்றையும் யானைகள் கடந்து வந்து விளைநிலங்களை சேதப்படுத்துகிறது. கூட்டமாக வரும் யானைகளை காட்டுக்குள் விரட்டவும், வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படாதவாறு வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

The post மணிமுத்தாறு அருகே காட்டு யானைகள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Related Stories: