இன்சாட் 3டிஎஸ் நிலைநிறுத்தம்: இஸ்ரோ தகவல்

சென்னை: வானிலை, பேரிடர் தொடர்பான எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் பெறுவதற்காக தயாரிக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் அதிநவீன செயற்கைகோள், ஜிஎஸ்எல்வி-எப்14 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. காலநிலை மாற்றம் ஏற்படும் நிலையில், வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் நிதி பங்களிப்பின் கீழ் வானிலை ஆய்வுக்காக இன்சாட்-3டிஎஸ் எனப்படும் அதிநவீன செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டது.

இந்நிலையில் விண்கலம் செலுத்தப்பட்ட போது 3, 4 நாட்கள் புவி வட்டபாதையில் பயணித்து பின் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் செயற்கைகோள் புவி வட்டப்பாதையில் பயணித்து அடுத்தக்கட்டமாக புவி ஒத்திசைவு சுற்றுப்பாதைக்கு சென்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவு: இன்சாட் விண்கலம் திட்டமிடப்பட்ட நான்கு லிக்விட் அபோஜி மோட்டார் மூலம் உந்துதல் அளிக்கும் பணிகள் நிறைவடைந்தன. விண்கலம் இப்போது புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் உள்ளது. இது வரும் 28ம் தேதிக்குள் சுற்றுப்பாதை சோதனை இடத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post இன்சாட் 3டிஎஸ் நிலைநிறுத்தம்: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Related Stories: