திண்டுக்கல்லில் பஞ்ச பூதங்களின் அம்சமாக திகழும் அருள்மிகு கோட்டை மாரியம்மன்

திண்டுக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில் 300 ஆண்டுக்களுக்கும் மேல் பலமையானது. புராண, சரித்திர காலத்தில் புகழ்பெற்று விளங்கிய திண்டுக்கல் மலைக்கோட்டையில் கீழே உள்ள கோட்டைகுளத்தின் கிழக்கு பகுதியில் ஒரு சிறு பீடமும், அதன்பின் மூலஸ்தான அம்மன் விக்ரகமும் ஸ்தாபிக்கப்பட்டது. அதுவே இவ்வூர் மக்களுக்கு காவல் தெய்வமாகவும் இருந்து வந்துள்ளது. அதுவே தற்போது புகழ்பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலாகும். நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் அம்சங்களாக இக்கோயிலில் அம்மன் அருள்பாலிக்கிறார். கோயில் கருவறை சதுர வடிவில் இருப்பதுடன், அதன் மேல்பகுதியில் ஒரு விமானமும் உண்டு. தொடக்க காலத்தில் மண்ணால் கட்டப்பட்டு இருந்தது. பின்னர் தற்போதைய நிலைக்கு மாறியுள்ளது. கோயிலின் மூலஸ்தான ஆவுடையார் பீடத்தில், வலது காலை தொங்கவிட்டு, இடது காலை மடக்கி சுகாசனமாக கோட்டை மாரியம்மன் அமர்ந்த நிலையில் எட்டு கைகளுடன் காட்சி தருகிறார். வலது கையில் பாம்புடன் உடுக்கை, கத்தி, வேல் சூலாயுமும், இடது கையில் அரிவாள், வில், மணி, கிண்ணம் போன்றவற்றுடன் அருள் பாலிக்கிறார். வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளிசாதம், தேய்காய், சுண்டல், எலுமிச்சை, கனிகள், மாவிளக்கு, கூழ், துள்ளுமாவு, உள்ளிட்டவை அம்மனுக்கு நிவேதன பொருட்காளக உள்ளன.

The post திண்டுக்கல்லில் பஞ்ச பூதங்களின் அம்சமாக திகழும் அருள்மிகு கோட்டை மாரியம்மன் appeared first on Dinakaran.

Related Stories: