“தலைப்பாகை அணிந்துள்ள காவலரை காலிஸ்தான் தீவிரவாதி என கூறுவதா?”: பாஜக-வை சாடும் மம்தா பானர்ஜி!!

கொல்கத்தா: தலைப்பாகை அணிந்துள்ள ஒவ்வொருவரையும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் என பாஜக கருதுவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டினார். மேற்குவங்க மாநிலத்தில் சதீஸ் காளி என்ற இடத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பு பணியில் டர்பன் அணிந்திருந்த சீக்கிய காவலரை பாஜக எம்.எல்.ஏ. காலிஸ்தான் தீவிரவாதி என கூறிய விடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு மம்தா கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர்; பாஜகவின் பிரித்தாளும் அரசியல் வெட்கமின்றி எல்லை மீறி உள்ளதாக தெரிவித்திருக்கிறார். நமது தேசத்திற்கான தியாகங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாட்டுகாக கூட்டப்படும். நமது சீக்கிய சகோதர, சகோதரிகளின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாகவும் மம்தா கூறினார். மேற்கு வங்கத்தில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பேன். அதைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.

The post “தலைப்பாகை அணிந்துள்ள காவலரை காலிஸ்தான் தீவிரவாதி என கூறுவதா?”: பாஜக-வை சாடும் மம்தா பானர்ஜி!! appeared first on Dinakaran.

Related Stories: