திமுக தெருமுனை பிரசார கூட்டம்

கயத்தாறு, பிப். 21: கயத்தாறு மத்திய ஒன்றிய திமுக மகளிரணி சார்பில் கரிசல்குளத்தில் பாராளுமன்ற தேர்தல் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கருப்பசாமி தலைமை வகித்தார். ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் கவிதா, ஒன்றிய மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் சுப்புராஜ் வரவேற்றார். பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராமலட்சுமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பேரூர் செயலாளர் சுரேஷ் கண்ணன், திட்டக்குழு உறுப்பினர் அய்யாத்துரை, அகிலாண்டபுரம் பஞ். துணை தலைவர் பால்ராஜ், ஒன்றிய மகளிரணி ஜாக்குலின், சரஸ்வதி, செல்வி, செல்வமணி, சீவிதா, லட்சுமி, ஆனந்தமாரி, வள்ளியம்மாள், மாவட்ட ஆதிதிராவிட அணி துணை அமைப்பாளர் ஜெபசிங், செல்லத்துரை, சிவன்பாதம் ஆகியோர் கலந்துகொண்டனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கருணாநிதி நன்றி கூறினார்.

The post திமுக தெருமுனை பிரசார கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: