₹3.54 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

திருச்செங்கோடு, பிப்.21: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர பருத்தி விற்பனை ரகசிய டெண்டர் முறையில் நடந்தது. பருத்தி ரகங்களை முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிராநல்லூர், புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்தனர். பிடி காட்டன் குவிண்டால் ₹6389 முதல் ₹7399 வரையிலும் விற்பனையானது. 178 மூட்டை பருத்தி ₹3.54 லட்சத்திற்கு விற்பனையானது.

The post ₹3.54 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: