அரசு பேருந்து ஓட்டுனர்கள் 2 பேர் காயம்

 

மணப்பாறை, பிப்.21: திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை வரை செல்லக்கூடிய தனியார் பேருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட வேண்டும். அதற்கு முன் ஊனையூர் வரை செல்லும் அரசு நகர பேருந்து 2.50 மணிக்கு புறப்பட வேண்டுமாம். ஆனால் ஓட்டுனர் கமலகண்னன் 2.53 வரை தனது பேருந்தை எடுக்கவில்லையாம். இதில் அரசு பேருந்து ஓட்டுனருக்கும், தனியார் பேருந்து ஓட்டுனரான ஆவுடையார்கோவில் கார்த்திக்(27)கிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அரசு பேருந்து நடத்துனர் தமிழ்செல்வனை(42) தாக்கியுள்ளார். அப்போது மற்றொரு அரசு நடத்துனர் முனியப்பன்(54) தகராறை தடுக்க முயன்ற நிலையில் காயமடைந்தார். இரண்டு பேருந்துகளும் சாலையில் குறுக்கே நிறுத்தப்பட்டதால் கோவில்பட்டி சாலை மார்க்கமும், விராலிமலை சாலை மார்க்கமும் போக்குவரத்து முழுமையாக முடங்கியது. இதையடுத்து இருத்தரப்பினரையும் காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். இதில் காயமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர்கள் தமிழ்செல்வன் மற்றும் முனியப்பன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மணப்பாறை போலீசார் தனியார் பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post அரசு பேருந்து ஓட்டுனர்கள் 2 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: