முசிறி நகராட்சியில் தடைசெய்யப்பட்ட 480 கிலோ பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

 

முசிறி, ஜூலை 23: முசிறி நகராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். முசிறி நகராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும் மற்றும் கடைகளில் போதை பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்தும் நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேனி உத்தரவின்படி முசிறியில் திருச்சி சாலை மற்றும் தா.பேட்டை சாலை பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்ததில், 480 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, மேலும் ரூ.7800 அபராதம் விதிக்கப்பட்டது, மேற்படி ஆய்வின் சுகாதார ஆய்வாளர், துப்புரவு பணி மேற்பார்வையாளர் களப்பணி உதவியாளர் ஆகியோர் உடனிருந்து மேற்கொண்டனர்.

 

The post முசிறி நகராட்சியில் தடைசெய்யப்பட்ட 480 கிலோ பிளாஸ்டிக் பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: