ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரியில் ஆராய்ச்சி கருத்தரங்கம்

 

திருச்சி, ஜூலை 25: ஜெ.ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் (சௌடாம்பிகா கல்விக் குழுமம்) ஆசிரியர்களுக்கான ஆராய்ச்சி கருத்தரங்கு மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது. கருத்தரங்கை சௌடாம்பிகா கல்விக்குழும துணை தாளாளர் சு.செந்தூர் செல்வன் துவக்கி வைத்தார்.கருத்தரங்கில் சிறப்புரையாளராக முனைவர் அங்கப்ப குணசேகரன் (USA) கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கான ஆராய்ச்சித் திறனை மேம்படுத்துதல் குறித்தும், தற்கால தொழில் நுட்பங்களை, அவரவர் துறை சார்ந்த ஆராய்ச்சிகளில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் விளக்கினார்.

மேலும் ஆராய்ச்சித் துறையில் தற்போதுள்ள வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்றும், மாணவர்களை ஆராய்ச்சி செய்வதற்கு எவ்விதத்தில் ஊக்கப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விரிவாக விளக்கினார். கருத்தரங்கில் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலில், ஆராய்ச்சி இதழ்கள், காப்புரிமை, புத்தகங்கள் வெளியிடுவது தொடர்பான சந்தேகங்களை விளக்கினார். முன்னதாக, இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் மதியழகன் வரவேற்றார். கருத்தரங்கில் அனைத்து ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டு பலனடைந்தனர்.

The post ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரியில் ஆராய்ச்சி கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: