கோபியில் வெங்கடேஷ்வரா கல்லூரியில் கிராமத்து சந்தை நிகழ்ச்சி

கோபி: கோபி வெங்கடேஷ்வரா கலை அறிவியல் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் வணிகவியல் துறையின் சார்பில் கிராமத்து சந்தை நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போவை கம்பன் கல்லூரி முதல்வர் சின்னதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 70-க்கும் மேற்பட்ட விற்பனை மையங்கள் மாணவர்களால் தொடங்கப்பட்டு, வாடிக்கையாளர்களை வரவேற்பது, வாடிக்கையாளர்கள் முன்னுலையில் பொருட்களை உற்பத்தி செய்தல், மாணவர்களே பொருட்களை கொண்டு வந்து பொருட்களின் விலை நிர்ணயம் செய்தல், வலைதளம் மூலமாக விற்பனை செய்தல், உணவு பொருட்களின் சுவை கூட்டுதல், உற்பத்தி பொருட்களின் மதிப்பு கூட்டுதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை சந்தைபடுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராமத்து சந்தை நிகழ்ச்சியில் உணவு தொடர்பான விற்பனை மையங்கள், துணி விற்பனை கடைகள், நான்கு சக்கர வாகன விற்பனை நிலையம், தொலைபேசி உதிரிபாகம், அலங்கார பொருட்கள் விற்பனை நிலையம் என பல்வேறு தலைப்புகளில் விற்பனை மையங்களை மாணவர்கள் அமைத்து இருந்தனர்.

The post கோபியில் வெங்கடேஷ்வரா கல்லூரியில் கிராமத்து சந்தை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: