‘பாஜக அரசுக்கு வேறு வேலை இல்லை’.. கர்நாடகா பள்ளிகளில் எழுதியிருந்த வாசகத்தை மாற்றிய விவகாரத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பதில்!!

பெங்களூரு: கர்நாடகாவில் உண்டு உறைவிட பள்ளியில் எழுதியிருந்த வாசகத்தை மாற்றிய விவகாரம் தற்போது அரசியலாக மாறியுள்ளது. அங்குள்ள உண்டு உறைவிட பள்ளிகளில் “கூப்பிய கையுடன் அறிவு கோயிலில் நுழையுங்கள்” என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது கர்நாடக காங்கிரஸ் அரசு இந்த பொன்மொழியை மாற்றி “அறிவு கோயிலில் பயமின்றி கேள்விகளை கேளுங்கள்” என்று மாற்றியுள்ளது. பிஜாபூர், பல்லாரி மற்றும் ராய்ச்சூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது கவிஞர் குவெம்புவை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் அரசு இப்படி ஒரு மாற்றங்களை செய்கிறது என்றும் பாஜக மாநிலத்தலைவர் விஜயேந்திரா குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே பாஜகவிற்கு பிரச்சனைகளை தூண்டுவதை தவிர வேறு வேலை இல்லை என்று கவிஞர் குவெம்புவின் சிந்தனைகளை காங்கிரஸ் கட்சி மக்களிடம் அன்றாட வாழ்வில் கொண்டு சேர்த்துள்ளதாக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

The post ‘பாஜக அரசுக்கு வேறு வேலை இல்லை’.. கர்நாடகா பள்ளிகளில் எழுதியிருந்த வாசகத்தை மாற்றிய விவகாரத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பதில்!! appeared first on Dinakaran.

Related Stories: