ரூ.257 கோடி மதிப்பீட்டில் டெல்லியில் வைகை-தமிழ்நாடு இல்லம்: போட்டித்தேர்வு மாணவர்கள் தங்குவதற்காக

டெல்லியில் வைகை-தமிழ்நாடு இல்லம், ரூ.257 கோடியில், 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் விருந்தினர்கள், அலுவலர்கள் மற்றும் போட்டித்தேர்வு மாணவர்கள் தங்குவதற்கு உரிய வசதிகளுடன் திராவிடக் கட்டிடக்கலை மரபில் வடிவமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்படும்.

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமைந்துள்ள வளாகத்தில், தமிழர்களின் தொன்மையான வரலாறு, பண்பாடு மற்றும் கலைகளை ஒரே இடத்தில் அரங்கேற்றம் செய்யும் வகையில், நாட்டுப்புற கலைகள், சிற்பங்கள், கைவினை மற்றும் கைத்தறிப் பொருட்கள், தமிழ்நாட்டின் மரபுசார் தாவரங்களை உள்ளடக்கிய பசுமைப் பரப்புகள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், இந்த வளாகம் தமிழ்ப் பண்பாட்டின் முகவரியாகத் திகழும் வண்ணம் ரூ.20 கோடியில் உருவாக்கப்படும்.

The post ரூ.257 கோடி மதிப்பீட்டில் டெல்லியில் வைகை-தமிழ்நாடு இல்லம்: போட்டித்தேர்வு மாணவர்கள் தங்குவதற்காக appeared first on Dinakaran.

Related Stories: