பொதுமக்கள் சேமிப்பு பணத்தில் கையாடல் அஞ்சலக பெண் ஊழியர் மீது வழக்கு

மணப்பாறை, பிப். 18: மணப்பாறை அருகே அஞ்சலக பணியாளர் மக்கள் சேமிப்பு பணத்தை கையாடல் செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தியாகேசர் ஆலை துணை அஞ்சலகத்தின் கீழ் இயங்கும் எப்.கீழையூர் கிளை அஞ்சலகத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் கனகலட்சுமி(32). இவர் பொதுமக்கள் அஞ்சலக சேமிப்பு கணக்கில் இருந்து பணம் கையாடல் செய்ததாக மணப்பாறை உட்கோட்டத்தில் பணிபுரியும் அருண் ஜெயசீலன்(54) என்பவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் கனகலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பொதுமக்கள் சேமிப்பு பணத்தில் கையாடல் அஞ்சலக பெண் ஊழியர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: