மாநில அளவில் நடைபெற உள்ள மகளிர் ஹேண்ட்பால் போட்டிக்கான திருச்சி மாவட்ட அணி தேர்வு

 

திருச்சி, பிப்.16: 20வது சீனியர் மாநில அளவிலான மகளிர் ஹேண்ட்பால் போட்டிக்கான திருச்சி மாவட்ட அணிக்கான வீராங்கனைகள் தேர்வு போட்டி திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு ஹேண்ட் பால் அசோசியேஷன் சார்பில் சேலம் கைலாஷ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வருகிற 17 மற்றும் 18ம் தேதிகளில் 20வது சீனியர் மாநில அளவிலான மகளிர் ஹேண்ட்பால் போட்டி நடைபெற உள்ளது.

இதற்கான திருச்சி மாவட்ட மகளிர் ஹேண்ட்பால் அணிக்கான தேர்வு திருச்சி இந்திரா காந்தி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 30 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஃபார்வேர்டு கோல்கீப்பர் மற்றும் பந்து எறிபவர், சென்டர் என பல்வேறு நிலைகளுக்கு ஏற்ப வீராங்கனைகள் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் திருச்சி மாவட்டம் சார்பில் ஹேண்ட்பால் போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளனர். ஜூனியர், சீனியர் ஆண்கள் ஹேண்ட்பால் போட்டியில் திருச்சி அணி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேஷன் துணை செயலாளர் கஜராஜன், இணை செயலாளர் சேகர், உடற்கல்வி இயக்குனர்கள் நித்யா, மகேஸ்வரி மற்றும் கோகுல கண்ணன், மகாமுனி ஆகியோர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்தனர்.

The post மாநில அளவில் நடைபெற உள்ள மகளிர் ஹேண்ட்பால் போட்டிக்கான திருச்சி மாவட்ட அணி தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: