தென்மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ரூ.280 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் துரைமுருகன் தகவல்

சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திருநெல்வேலி தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன் (பாஜ) பேசியதாவது: நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்து, நீர்வளத்துறை சார்பில் தாமிரபரணியை தூர்வாரி சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர் வாரி கிடைக்கும் மண்ணை விவசாயிகளே எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: விவசாயிகள் எடுத்தால் பிரச்னை எதுவும் இல்லை. விற்பனைக்காக எடுக்க வருகிறார்கள். தென்மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பை சரிசெய்ய 480 பணிகளுக்கு ரூ.280 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணிகள் தொடங்கும்.
நயினார் நாகேந்திரன்: தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பயணிகள் கிளாம்பாக்கத்தில் இறங்க வேண்டியுள்ளது. தமிழகத்தின் தலைநகராக திருச்சியை மாற்ற வேண்டும்.
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்: உறுப்பினர் சொல்வது நல்ல யோசனைதான். கிளாம்பாக்கம் வரும் பயணிகள் பொருட்களை எளிதாக எடுத்துவர சில பேருந்துகளில் பின்புற இருக்கை நீக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் இங்கே திருச்சியை தலைநகரமாக மாற்ற வேண்டும் என்கிறார். அதேபோல், ஒன்றிய அரசிடம் சொல்லி டெல்லியையும் நாட்டின் மையப்பகுதிக்கு கொண்டுவர வேண்டும்.

The post தென்மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ரூ.280 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் துரைமுருகன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: