அரசியல் ஆதாயத்துக்காக பாரத ரத்னா விருதை பாஜ கொச்சைப்படுத்துகிறது: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை: அரசியல் ஆதாயத்திற்காக பாரத ரத்னா விருதை பாஜ அரசு கொச்சைப்படுத்துகிறது என பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை செங்குன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசியல் சாசனத்துக்கு எதிராக ஆளுநர் நடந்து கொண்டது கண்டனத்துக்கு உரியது. அவரின் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் அடிமட்ட தொண்டராகவே செயல்பட்டு வருகிறார். நாடாளுமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி விவசாயிகள் போராடி வருகின்றனர். எம்.எஸ்.சுவாமிநாதன் கொள்கைகளை காலில் போட்டு மிதித்து விட்டு அவருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பது கண்ணை குருடாக்கி விட்டு சித்திரத்தை கொடுத்து என்ன பயன், பூமி பூஜைக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கும் அழைக்கப்படாததால் அதிருப்தியில் உள்ள அத்வானிக்கு ஆறுதல் பரிசாக பாரத ரத்னா கொடுக்கப்பட்டுள்ளது. பாஜ அரசு அரசியல் ஆதாயத்திற்காக பாரத ரத்னா விருதை கொச்சைப்படுத்துகிறது. திமுக கூட்டணியில் நாங்கள் கேட்டுள்ள தொகுதிகள் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது.

The post அரசியல் ஆதாயத்துக்காக பாரத ரத்னா விருதை பாஜ கொச்சைப்படுத்துகிறது: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: