பாலக்கரை பகுதியில் ஆக்கிமிப்பு அகற்றம்

திருச்சி, பிப்.14: திருச்சி மாநகராட்சி சார்பில், பாலக்கரை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட ஆக்கிமிப்புகளை மாநகராட்சியினர் நேற்று அகற்றம் செய்தனர். திருச்சி பாலக்கரை மேம்பாலத்திற்கு அடியில் உள்ள இணைப்புச் சாலைகள் மற்றும் மாநகராட்சிக்குச் சொந்தமான காலியிடங்களில் பலரும் ஆக்கிரமித்து கடைகள் மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்காக பயன்படுத்தி வருவதாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்படவில்லை.

அதன் அடிப்படையில், நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாலக்கரை பாலப்பகுதியில் உள்ள இணைப்புச்சாலை மற்றும் பருப்புக்கார தெரு உள்ளிட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றன. திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட உதவி செயற்பொறியாளர் சுந்தரவடிவேல் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த ஆக்கிரமிப்பு அகற்றப் பணிகளில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் பல்வேறு ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன. அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக பாலக்கரை போலீசார் பாதுகாப்பு மேற்கொண்டனர்.

The post பாலக்கரை பகுதியில் ஆக்கிமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: