ரேசனில் மானியத்தில் பாமாயில் விற்பது ரத்துகோரி ஆர்ப்பாட்டம்

துறையூர், பிப்.14: திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில் இந்தோனேசியா மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு மானிய விலையில் ரேஷன் கடையில் பாமாயில் விற்பதை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மானிய விலையில் பாமாயில் கொள்முதல் செய்வதை ரத்து செய்து இந்தியாவில் விளையும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமை வகித்தார் திருச்சி மாவட்ட செயலாளர் பொன்மாறன் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செல்வராசு மாவட்ட அவைத்தலைவர் பெருமாள் மாவட்ட துணை செயலாளர் பூபதி உள்ளிட்ட பொறுப்பாளர்களும் சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

The post ரேசனில் மானியத்தில் பாமாயில் விற்பது ரத்துகோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: