வருவாய்த்துறையினர் போராட்டம்

 

சிவகங்கை, பிப். 14: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணை உடனே வெளியிட வேண்டும்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கணக்கில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் 3ஆண்டுகளுக்கும் மேலாக காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி செய்ய முழுமையான நிதி ஒதுக்கீட்டை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் தமிழரசன் தலைமை வகித்து கோரிக்கை விளக்கவுரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் நாகநாதன், அசாக்குமார், தென்னரசு, மாணிக்கவாசகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post வருவாய்த்துறையினர் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: