என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்: ஆந்திர அமைச்சர் ரோஜா சவால்

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜாவின் எம்எல்ஏ தொகுதியான நகரியில் மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போது, ரோஜாவை கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும் அவரை ஊழல் ராணி என விமர்சித்தார். ஷர்மிளாவின் கருத்துக்கு அமைச்சர் ரோஜா கண்டனம் தெரிவித்து கூறியதாவது: ஷர்மிளா தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவர் என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்.

ஒய்.எஸ்.ஆரின் வாரிசு என்று கூறிக்கொள்ளும் ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர். புகழை வளர்க்க எதையும் செய்யவில்லை. ஜெகனை தோற்கடிக்க சந்திரபாபு விட்ட அம்பாக ஷர்மிளா செயல்படுகிறார்.ஜெகன் மோகன் தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் லட்சியத்திற்காக உழைத்து வரக்கூடிய நிலையில் ​​ஷர்மிளா ஒய்எஸ்ஆரின் சொத்துகளுக்காக போராடுகிறார். மாநில நலனை கருத்தில் கொண்டு வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முதல்வர் ஜெகன் மோகன் செயல்பட்டால் அவர் மீது விஷத்தை கக்குகிறார். ஜெகன் தான் ராஜசேகர ரெட்டியின் உண்மையான வாரிசு இவ்வாறு அவர் கூறினார்.

The post என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்: ஆந்திர அமைச்சர் ரோஜா சவால் appeared first on Dinakaran.

Related Stories: