மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றினால் போராட்டம்: கிருஷ்ணசாமி பேட்டி

சென்னை: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றினால் போராட்டம் நடத்தப்படும் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சட்டவிரோதமாக கட்டாயப்படுத்தி வெளியேற செய்கிறார்கள். மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் களக்காடு, முண்டந்துறை வனப்பகுதியில் 8,373 ஏக்கர் பரப்பளவில் தேயிலை தோட்டங்கள் 200 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

சட்டப்படியாக 2028ம் ஆண்டு தான் தொழிலாளர்கள் பணி நிறைவு பெற உள்ளது. ஆனால் இப்போதே அவர்களை வெளியேற்றுவதன் அவசியம் என்ன. பிபிடிசி நிர்வாகம் 45 நாட்களுக்குள் அங்குள்ளவர்களை கட்டாயமாக வெளியேற்ற கையெழுத்து பெற்றுள்ளார்கள். மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களின் வாழ்வுரிமையை நீக்கி அவர்களை வெளியேற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தனிப்பட்ட முதலாளிகளுக்காக மாஞ்சோலை பறிக்கப்படுகிறது. மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று வழி நடத்த வேண்டும். மாஞ்சோலையில் போராட வேண்டிய சூழல் இதுவரை நிலவவில்லை, ஒருவேளை மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேறினால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றினால் போராட்டம்: கிருஷ்ணசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: