உண்மையாக உழைத்தால் காங்கிரசில் அங்கீகாரம் கிடைக்கும்: செல்வப்பெருந்தகை பேச்சு

சென்னை: தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில், எம்.பி. ராகுல்காந்தியின் 54வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் தி.நகர் முத்துரங்கன் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந் து கொண்டு கேக் வெட்டி கட்சியினருக்கு இனிப்புவழங்கினார். நிகழ்ச்சியில், அசன் மவுலானா எம்எல்ஏ, மாநில துணை தலைவர்கள் கே.விஜயன், விருகை பட்டாபி, இமையா கக்கன், மாநில பொதுச் செயலாளர்கள் இல.பாஸ்கரன், டி.செல்வம், எஸ்.ஏ.வாசு, அருள் பெத்தையா, இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத், மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத், மாநில செயலாளர் ஏ.வி.எம்.ஷெரீப், மாவட்ட பொருளாளர் ஏ.ஜார்ஜ், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் மன்சூர் அலிகான், மாவட்ட துணைத் தலைவர் செல்வகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிறகு செல்வப்பெருந்தகை பேசியதாவது: சமூகநீதி அடிப்படையில் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் நாங்கள் கண்டறிந்து உள்ளோம். உண்மையாக உழைத்தவர்களுக்கு நிச்சயம் ஒருநாள் அங்கீகாரம் கிடைக்கும். கட்சியை வலிமைப்படுத்தும் எண்ணத்தில் அனைவரும் செயல்படுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

* நீட் ரத்து கோரி இன்று ஆர்ப்பாட்டம்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மையில் வெளியான நீட் தேர்வு முடிவில் பல்வேறு குளறுபடிகளும், குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன. நீட் தேர்வால் 25 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி இதுவரை மவுனம் சாதித்து வருகிறார். எனவே, அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின் படியும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் எனது தலைமையில் இன்று மாலை 3 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ கல்லூரிக்கான நுழைவு தேர்வு நடத்தும் அதிகாரத்தை அந்தந்த மாநில அரசுளுக்கே வழங்க வேண்டும் என்ற ராகுல்காந்தியின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நமது கண்டனக் குரல் ஓங்கி ஒலிக்க ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள அழைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post உண்மையாக உழைத்தால் காங்கிரசில் அங்கீகாரம் கிடைக்கும்: செல்வப்பெருந்தகை பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: