தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர் கூட்டம்

பட்டிவீரன்பட்டி, பிப். 12: பட்டிவீரன்பட்டி அருகே கே.சிங்காரக்கோட்டையில் தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பழனிச்சாமி, திண்டுக்கல் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரத்தினக்குமார் வரவேற்றார்.

இக்கூட்டத்தில், சங்க பணியில் உள்ளவர்களுக்கு தகுதி அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்குதல், கருணை அடிப்படையில் வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு தாமதமின்றி பணி வழங்குதல், நியாய விலை கடைக்கும் வழங்கும் பொருட்களை சரியான எடையில் வழங்குதல் மற்றும் சங்க வளர்ச்சி மற்றும் பணியாளர்களின் நலனில் அக்கறையுடன் செயல்படும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஆத்தூர் வட்டார புதிய தலைவர் முத்துக்குமார், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் வனிதா ஆகியோருக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: