பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா முகூர்த்தக்கால் ஊன்றுதலுடன் துவங்கியது

பழநி, பிப். 10: பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா முகூர்த்தக்கால் ஊன்றுதலுடன் துவங்கியது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் கிழக்கு ரதவீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இத்திருவிழா நேற்று சிம்ம லக்னத்தில் முகூர்த்தக்கால் ஊன்றுதலுடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. வரும் பிப்.13ம் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். பிப்.20ம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் சிம்ம லக்னத்தில் கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெறும். பிப்.27ம் தேதி இரவு 7.15 மணிக்கு மேல் கன்யா லக்னத்தில் திருக்கல்யாணம் மற்றும் மாவிளக்கு பூஜைகள் நடைபெறும். பிப்.28ம் தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்.29ம் தேதி கொடியிறக்குதலுடன் விழா முடிவடைகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் பாரதி தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

The post பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா முகூர்த்தக்கால் ஊன்றுதலுடன் துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: