போடி பகுதியில் பீட்ரூட் சாகுபடி பணி தீவிரம்

 

 

போடி, பிப். 8: போடி அருகே மேற்கு மலையில் உள்ள குரங்கணி மலைப்பகுதியில் தென்னை, மா, வாழை, இலவம் பஞ்சு, எலுமிச்சை, கொய்யா, ஆலை கரும்பு, தக்காளி என விவசாயம் நடக்கிறது. அதுபோல் இப்பகுதியில் பீட்ரூட் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. போடியை சுற்றியுள்ள சிலமலை, செல்லமரத்துப்பட்டி, ராசிங்காபுரம், சங்கராபுரம்பட்டி, சுந்தர்ராஜபுரம், அம்மாபட்டி, நாகலாபுரம், பெருமாள்கவுண்டன்பட்டி, விசுவாசபுரம் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் பீட்ரூட் பயிரை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து பீட்ரூட் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது.

The post போடி பகுதியில் பீட்ரூட் சாகுபடி பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: