நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை ஓபிஎஸ் நாளை நெல்லை வருகை

கேடிசி நகர்,பிப்.7: ஓபிஎஸ் அணி நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் சிவலிங்கமுத்து, நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்ஏ., தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார். அதன்படி நாளை (8ம் தேதி) காலை 10 மணிக்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேரன்மகாதேவி ஒன்றியம் கங்கனாங்குளத்தில் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நெல்லை நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அவருடன் எம்எல்ஏக்கள் வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதில் மாவட்ட, சார்பு அணி, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

The post நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை ஓபிஎஸ் நாளை நெல்லை வருகை appeared first on Dinakaran.

Related Stories: