தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் ரூ.1.45 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள்

 

தஞ்சாவூர் பிப்.6: தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.தஞ்சாவூர் மாநகராட்சி 14வது வார்டுக்குட்பட்ட சின்னக்கடை தெருவில் அரசு பள்ளிக்கு கல்வி நிதி திட்டத்தின் படி ரூ.40 லட்சம் மதிப்பில் கூடுதலாக வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். புதிய பள்ளி கட்டிடத்தை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். பின்னர் வகுப்பறைகளை பார்வையிட்டார்.

இதேபோல் மாநகராட்சி 2வது வார்டு கரந்தை வேலூர் தெருவில் ரூ.16.50 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி, 7வது வார்டு எம்.ஜி.ஆர். நகரில் ரூ.19.28 லட்சம் மதிப்பில் சமுதாய கழிப்பறை, அதே நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம், ஏ.ஒய்.ஏ. நாடார் சாலையில் ரூ.20 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் ஆகிய கட்டிடங்களையும் மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார். மொத்தம் ரூ.1.45 கோடி மதிப்பிலான கட்டடங்களை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி பொறியாளர் ரமேஷ், ஆனந்தி, மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர் பாப்பா, திமுக பகுதி செயலாளர் கார்த்திக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் ரூ.1.45 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் appeared first on Dinakaran.

Related Stories: