குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 219 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை

 

நாகப்பட்டினம்,பிப்.6: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 219 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ5,500 வீதம் மொத்தம் ரூ.22 ஆயிரம் மதிப்பில் இலவச பித்தளை தேய்ப்புபெட்டி, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1,13,544 மதிப்பில் இரண்டு பெண் குழந்தைகள் முதிர்வு தொகை ஆகியவற்றை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

 

The post குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 219 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: