லக்னோ சிறையில் 63 கைதிகளுக்கு எய்ட்ஸ்

லக்னோ: லக்னோ மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள 63 கைதிகள் எய்ட்ஸ் நோயாளிகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறுித்து சிறைத்துறை இயக்குநர் ஜெனரல் எஸ்.என்.சபாத் கூறுகையில்,’ உத்தரபிரதேசத்தின் அனைத்து சிறைகளிலும் எச்.ஐ.வி பாதித்தவர்களை அவ்வப்போது பரிசோதித்து வருகிறோம். லக்னோ சிறையில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஒருவர் கூட எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படவில்லை. அவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்.

லக்னோ சிறையில் தற்போது, ​​மொத்தம் 63 கைதிகள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் போதைக்கு அடிமையானவர்கள். சிறைக்குள் நுழைந்த பிறகு எந்த கைதியும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படவில்லை. கைதிகள் அனைவருக்கும் எச்.ஐ.வி மையத்தில் இருந்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றார்.

 

The post லக்னோ சிறையில் 63 கைதிகளுக்கு எய்ட்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: