கேரளா உயர்நீதிமன்றத்தை களமசேரிக்கு இடமாற்றம் செய்ய முடிவு: முதல்வர், தலைமை நீதிபதி பங்கேற்ற உயர்மட்ட கூட்டத்தில் ஒப்புதல்

திருவனந்தபுரம்: கேரளா உயர் நீதிமன்றத்தை களமசேரிக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் உயர்நீதிமன்றம் கொச்சியில் இயங்கி வருகிறது. இட நெருக்கடி காரணமாக உயர்நீதிமன்றத்தை களமசேரிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக கேரளா உயர்நீதிமன்றத்தை உள்ளடக்கிய நிதித்துறை நகரத்தை அமைப்பதற்கான உயர்மட்ட கூட்டம் முதலமைச்சர் பினராய் விஜயன், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் கொச்சியில் நடைபெற்றது.

இதில் களமசேரியில் நீதித்துறையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பினராய் விஜயன் தெரிவித்தார். பிப்ரவரி 17ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மாநில அமைச்சர்கள் முன்னிலையில் இட ஆய்வு நடைபெறும். உயர்நீதிமன்ற கட்டிடத்தில் 60 நீதிமன்றங்கள் அமைக்கப்படும். 28 லட்சம் சதுர அடி இப்பகுதியின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு நீண்ட கால கண்ணோட்டத்துடன் வசதிகளை வழங்குவதே திட்டமாகும்.

The post கேரளா உயர்நீதிமன்றத்தை களமசேரிக்கு இடமாற்றம் செய்ய முடிவு: முதல்வர், தலைமை நீதிபதி பங்கேற்ற உயர்மட்ட கூட்டத்தில் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: