‘கண்டா வரச்சொலுங்க, கூட்டணி வைக்க கட்சிகள் தேவை’ அதிமுகவை கலாய்த்து திருவாரூரில் சுவரொட்டிகள்

வலங்கைமான்: நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. பாஜ கூட்டணியில் இருந்த அதிமுக தற்போது சிறுபான்மையினர் வாக்குகளை கைப்பற்றுவதற்காக பாஜவுடன் கூட்டணி இல்லை எனக்கூறி வருகிறது. சில கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்கு அதிமுக முயற்சித்து வரும் சூசக பணியும் பலனளிக்கவில்லை. பாஜவுடன் அதிமுக கூட்டணி இல்லை எனக்கூறி வருவது சிறுபான்மையினர் ஏமாற்றும் வேலை என மூத்த அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வலங்கைமான் பகுதிகளில் அதிமுகவை விமர்சனம் செய்யும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் “கண்டா வரச்சொல்லுங்க’’ என்ற தலைப்பில் பாஜவை எதிர்ப்பது போல் நடிக்க தெரிந்த கட்சிகளுக்கு முன்னுரிமை, கட்சியில் பத்து பேரோ, ஒரே ஒருத்தரோ இருந்தால் கூட போதும். குறிப்பாக சுயமரியாதை, சூடு சொரணை இருக்கவே கூடாது. முக்கியமாக நாங்கதான் உண்மையான அதிமுக என்பதை நம்ப வேண்டும் என்ற நான்கு வாசங்கள் இடம் பெற்றுள்ளது. அதிமுகவை விமர்சிக்கும் வகையில் ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டிகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post ‘கண்டா வரச்சொலுங்க, கூட்டணி வைக்க கட்சிகள் தேவை’ அதிமுகவை கலாய்த்து திருவாரூரில் சுவரொட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: