ஸ்ரீ நிகேதன் கல்விக் குழுமம் சார்பில் பெரும்புலவருக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகை

திருவள்ளூர்: திருவள்ளூர், ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சகுந்தலாம்மாள் நினைவு 13ம் ஆண்டு தமிழ் வளர்ச்சிப் போட்டிகளின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ப.விஷ்ணுசரண் தலைமை தாங்கினார். முதன்மை செயல் அலுவலர் பரணிதரன், முதல்வர் ஸ்டெல்லா ஜோசப், தமிழ் ஆசிரியர்கள் ஜெனித்தா, உமாமகேஸ்வரி பாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் தரணி வரவேற்றார். இந்த விழாவில், ஒரு புதிய முயற்சியாக, தமிழ் மொழிக்காகவே வாழ்நாள் முழுவதும் உழைத்து தனது வாழ்க்கையை தியாகம் செய்த தமிழகத்தை சார்ந்த தமிழறிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கி அவர்களின் வாழ்வை செம்மைப்படுத்த பள்ளி நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி ரூ.1 லட்சம் நிதி உதவியுடன் கூடிய தமிழறிஞர் என்ற உயரிய விருதை, முதன்முறையாக பெரும்புலவர் வெற்றியழகனாருக்கு, பள்ளிக் குழுமத் தாளாளர் ப.விஷ்ணுசரண் வழங்கி கௌரவித்தார். மேலும் தமிழ் வளர்ச்சிப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.2 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசுத் தொகையினையும், சான்றிதழும், கேடயமும், வாழ்க்கையை நன்நெறிப்படுத்தும் நல்ல நூல்களையும் வழங்கினார். முடிவில் தமிழ் ஆசிரியர் கலையரசன் நன்றி கூறினார். விழாவில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை குறித்தும், மாற்றுப்பொருட்கள் குறித்த சுற்றுச் சூழளுக்கான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் அடிப்படையில் 1000 பேருக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.

The post ஸ்ரீ நிகேதன் கல்விக் குழுமம் சார்பில் பெரும்புலவருக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகை appeared first on Dinakaran.

Related Stories: