பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

டெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 96 வயதாகும் எல்.கே.அத்வானி, துணை பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். தொடக்கம் முதலே ஆர்.எஸ்.எஸ்.ஸில் தீவிரமாக பணியாற்றிய எல்.கே.அத்வானி, பாஜகவை நிறுவிய தலைவர்களுள் ஒருவர். 1990ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி எல்.கே.அத்வானி நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டார். அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரை அயோத்தி சென்றடைந்தபோதே பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

பிரதமர் மோடி வாழ்த்து:

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ரத்னா விருதுக்கு அறிவிக்கப்பட்டதற்கு அத்வானிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்தியாவின் வளர்ச்சிக்கு எல்.கே.அத்வானியின் பங்களிப்பு மிகவும் மகத்தானது. நமது காலத்தில் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவர் அத்வானி. அடிமட்ட தொண்டன் முதல் துணைபிரதமர் வரை பணியாற்றி நாட்டிற்கு சேவையாற்றியுள்ளார். உள்துறை மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சராகவும் அத்வானி பணியாற்றியுள்ளார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

The post பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: