நெல்லை மனோன்மணி சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்..!!

நெல்லை : நெல்லை மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்துள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30வது பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் ரவி, சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி வருகிறார். தங்கம் வென்ற 108 மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பில் பட்டம் வென்ற 351 பேருக்கு ஆளுநர் பட்டம் வழங்குகிறார்.

சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்பப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் நனினா வியாஸ் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவில்லை. அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விழாவை புறக்கணித்தார். ஏற்கனவே அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவிலும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post நெல்லை மனோன்மணி சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்..!! appeared first on Dinakaran.

Related Stories: