மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரியில் என்சிசி வீராங்கனைகளுக்கு ஆயுதங்களை கையாளும் பயிற்சி

 

மன்னார்குடி,பிப்.3: மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரியில் என்சிசி வீராங்கனைகளுக்கு ஆயுதங்களை கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டது. தேசிய மாணவர் படை 8வது படைப்பிரிவு கும்பகோணம் சார்பில் கல்லூரிகளில் கல்வி பயின்று வரும் என்சிசி வீரர்களுக்கான சி சான்றிதழ் தேர்வு பயிற்சி முகாம் ராஜகோபால சுவாமி அரசுக்கல்லூரி வளாகத்தில் மூன்று நாட்கள் நடக்கிறது. இப்பயிற்சியில், அதிராம்பட்டினம் காதர் மொய்தீன் கல்லூரி, செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி மற்றும் ராஜகோபால சுவாமி அரசு கல்லூரிகளை சேர்ந்த 80 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.

இவர்களுக்கு தேசிய மாணவர் படை கும்பகோணம் 8வது படைப்பிரிவை சேர்ந்த சுபேதார்கள் சுதாகர், அருண், ஹவில்தார்கள் ரகுராம், மணிகண்டன், துரைமுருகன், வேல்முருகன், புவன் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு அணிவகுப்பு, வரைபடம் கண்காணிப்பு, ஆயுதங்கள் கையாளுதல் மற்றும் சீரமைத்தல், போர்முறைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்தனர். இப்பயிற்சி குறித்து முகாம் ஏற்பாட்டாளர் லெப்ராஜன் கூறுகையில், கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு படிக்கும் இருபாலர் என்சிசி வீரர்களுக்கு சி சான்றிதழ் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த சான்றிதழ் பெறும் வீரர்கள் இந்திய ராணுவத்தில் எழுத்து தேர்வு இன்றி நேரிடையாக சேர முடியும். காவல் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளில் 5 சதவீத மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்றார்.

The post மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரியில் என்சிசி வீராங்கனைகளுக்கு ஆயுதங்களை கையாளும் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: