ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அனல்மின் நிலையத்தில் வேலை நிறுத்த போராட்டம்

பொன்னேரி: வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து வல்லூர் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டது. இங்குள்ள, 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கரி கையாளுதல், கொதிகலன் கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை தொழிலாளர்கள் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கி கேட் அமர்வு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலக்கரி மற்றும் சாம்பல் துகள்களிலும், ஒப்பந்த தொழிலாளர்கள் சிரமத்துடன் பணியாற்றி வருவதாகவும், விபத்துக்களில் தொழிலாளர்கள் பாதிப்படைவதாகவும் உரிமம் இல்லாமல் ஆபத்தான முறையில் வேலை வாங்கும் அனல் மின் நிலைய அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொழிலாளர்கள் தொடர்பாக எந்த பதிவுகளும் இல்லாத நிலையில் முறையாக பதிவு செய்து அனைவரையும் நிரந்தர தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

The post ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அனல்மின் நிலையத்தில் வேலை நிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: