ஆளுங்கட்சியை எதிர்த்து பேச உரிமை உள்ளது என்றாலும் எதற்காக இப்படி மோசமான வார்த்தைகளையா பயன்படுத்த வேண்டும்?: சி.வி சண்முகத்துக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது உள்ளிட்ட விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்து நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் பேசி இருந்தார். இது தொடர்பாக அளிக்கப்பட்டிருந்த புகாரின் அடிப்படையில் சி.வி சண்முகம் மீது இரு பிரிவினர்களுக்கிடையே வெறுப்பை உண்டாகுதல், பொதுமக்களிடம் தவறான தகவலை அனுப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணையை தடை செய்ய கோரி சி.வி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது பேசிய நீதிபதி ஆளுங்கட்சியை எதிர்த்து பேச உரிமை இருந்தாலும் எதற்காக இப்படி மோசமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என நீதிபதி கண்டனம் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவர் முன்னாள் அமைச்சராக இருந்தவரை கைத்தட்டலுக்காக இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது ஏற்றுகொள்ளமுடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சீவி சண்முகம் மீதான விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

The post ஆளுங்கட்சியை எதிர்த்து பேச உரிமை உள்ளது என்றாலும் எதற்காக இப்படி மோசமான வார்த்தைகளையா பயன்படுத்த வேண்டும்?: சி.வி சண்முகத்துக்கு ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: