ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, திமுக எம்.பி. திருச்சி சிவா உடன் சந்திப்பு..!!

டெல்லி: ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, திமுக எம்.பி. திருச்சி சிவாவை டெல்லியில் வைத்து சந்தித்தார். ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் தலைவராக இருந்த ஒய்.எஸ்.ஆர். ஷர்மிளா தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லி வருகை தந்த அவர், திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவாவை சந்தித்து பல்வேறு அரசியல் விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது குறித்து தனக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை இன்று காலை முதல் ஷர்மிளா சந்தித்து வருகிறார். இன்று காலையில் முதலில் சரத் பவாரை அவர் சந்தித்து பேசினார். அதற்கு பிறகு தற்போது திமுக எம்.பி. திருச்சி சிவாவை சந்தித்து இது தொடர்பாக பேசியுள்ளார். அடுத்தகட்டமாக சீதாராம் யெச்சூரியை சந்திக்க உள்ளார். தொடர்ச்சியாக காங்கிரஸ் முக்கிய தலைவர்களையும் அவர் இன்றைய தினம் டெல்லியில் சந்தித்து பிறகு ஆந்திரா திரும்புவார் என கூறப்பட்டுள்ளது.

The post ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, திமுக எம்.பி. திருச்சி சிவா உடன் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: