விருதுநகர் அரசு அருங்காட்சியகம் சார்பில் மகாத்மா காந்தி நினைவு ஓவியப்போட்டி

விருதுநகர், ஜன. 31: விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் காந்தியடிகள் நினைவு தின சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது. மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30 சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் தியாகிகள் நாளாக அனுசரிக்கப்பட்டுவருகிறது.சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை மாணவ மாணவியர்கள் நினைவு கூறும் வகையிலும், மாணவ மாணவியரின் தனித்திறமைகளை வெளிப்படுத்தவும்.

ஊக்குவிக்கும் வகையிலும், விருதுநகர் அரசு அருங்காட்சியகம் சார்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது.இதில் 17 பள்ளிகளிலிருந்து 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் 49 பேர் கலந்து கொண்டனர். அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கோபிகா முதல்பரிசையும், சிவகாசி எஸ்.ஹெச்.என் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பத்மபிரியா இரண்டாம் பரிசையும்மேல சின்னையாபுரம் அன்னத்தாயம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சஞ்சய் மூன்றாம்பரிசையும் வென்றனர்.அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக காந்தியடிகளின் சுயசரிதை நூலான சத்திய சோதனை நூல் வழங்கப்பட்டது. வெற்றிச் சான்றிதழ், பரிசுகளை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் பால்துரை வழங்கினார். இளநிலை உதவியாளர் விவேக் ஆனந்த் நன்றி கூறினார். மேலும் விருதுநகர் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்றது. இந்த புகைப்படக் கண்காட்சி வருகின்ற பிப்ரவரி 10ம் தேதி வரை நடைபெறும் அனைவரும் வருகை தந்து பயனடையுமாறு காப்பாட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post விருதுநகர் அரசு அருங்காட்சியகம் சார்பில் மகாத்மா காந்தி நினைவு ஓவியப்போட்டி appeared first on Dinakaran.

Related Stories: