மனித மூளையில் சிப் பொருத்தி சாதனை: எலான் மஸ்க் அடுத்த அதிரடி

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமாக நியூராலிங்க் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் நரம்பியல் சிதைவு, ஆட்டிசம் பாதிப்பு, மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிக்சை அளிக்கும் வகையில் மூளையில் சிப் பொருத்தும் சோதனையை மேற்கொண்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளுக்கு சிப் பொருத்தி சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததால் மனித மூளைக்கும் சிப்பொருத்த நியூராலிங்க் நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் அனுமதி கோரியிருந்தது. இதற்கு அனுமதி கிடைத்ததால் மனித மூளைக்குள் சிப் பொருத்தி சோதனையை தொடங்கி உள்ளது. மூளைக்கும், கணினிக்கும் இன்டெர்பேஸ் இணைப்பை உருவாக்கும் வகையில் மனித மூளையில் சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்களின் பார்வை, இயக்கம் உள்ளிட்டவற்றை மீட்டெடுக்க முடியும் என்று நியூராலிங்க் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

The post மனித மூளையில் சிப் பொருத்தி சாதனை: எலான் மஸ்க் அடுத்த அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: