உலகின் முதன்முறையாக ரோபோக்கள் மூலம் தலைமாற்று அறுவை சிகிச்சை: அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட அனிமேஷன் வீடியோவால் பொதுமக்கள் வியப்பு

வாஷிங்டன்: உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சையை அமெரிக்காவின் முன்னணி நிறுவனம் உருவாக்கி வருவது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான BrainBridge தலை மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக செயலாக்க வீடியோ ஒன்றை வெளியிட்ட அந்த நிறுவனம் ரோபோக்களின் உதவியுடன் தலை மாற்று அறுவை சிகிச்சை செய்வது குறித்து காட்சிகளாக விவரித்துள்ளது.

அதில் இரு ரோபோக்கள் ஒரே நேரத்தில் 2 பேரின் தலைகளை அறுவை சிகிச்சை செய்து அதில் ஒரு உடலில் இருந்து தலையை அகற்றி மற்றொரு உடலுக்கு வைப்பதாக காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் நரம்பியல் நோய்கள், மற்றும் 4ம் கட்ட புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு பயனளிக்கும் எனவும் BrainBridge தெரிவித்துள்ளது. இந்த அறுவை சிகிச்சையை ரோபோக்களை வழிநடத்த AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த ஆய்வு வெற்றி அடைந்தால் அடுத்த 8 ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உலகின் முதன்முறையாக ரோபோக்கள் மூலம் தலைமாற்று அறுவை சிகிச்சை: அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட அனிமேஷன் வீடியோவால் பொதுமக்கள் வியப்பு appeared first on Dinakaran.

Related Stories: